Labels:

மாநில பொதுக்குழு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்நாடு மாநல பொதுக்குழு (07/02/2016)
இராமநாதபுரதில் கேம்பஸ் ஃப்ரண்டின் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பொதுக்குழுவும் மாணவ எழுச்சி பேரணி மற்றும் மாணவ எழுச்சி பொதுக்கூட்டமும் நடைபெற்றது 



Labels:

கல்வி வழிகாட்டி & இலக்கு நிர்ணயித்தல் முகாம்"

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் மற்றும் ஆக்சஸ்(Access) இந்தியா இணைந்து, மாணவர்களின் இலக்கு எப்படி இருக்க வேண்டும் , மேற்படிப்புகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் மற்றும் கல்வி கற்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி முத்துப்பேட்டையில்லுள்ள பிரிலியண்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 28 Jan 2016 அன்று 10மற்றும்12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் முன்னால் மாவட்ட தலைவர் வழகறிஞர் தோழர் முகமது பைசல் அவர்கள் தலைமை தாங்கினார், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினறும் , முன்னால் பள்ளி மாணவருமான தோழர் மர்சூக் அகமது கலந்து கொண்டார். இவ்வகுப்பினை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழு உறுப்பினரும் ஆக்சஸ் இந்தியாவின் பயிர்ச்சியாளருமான தோழர் வழக்கறிஞர் முகமது தம்பி சிறப்பாக நடத்தினார். இதில் சுமார் 120 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.









Labels:

நிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்

ஹைதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு காரணமான கயவர்களை கண்டித்து தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் அஹமது மீரான் தலைமையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழு உறுப்பினர் சுபகத்துல்லா கண்டன உரையாற்றி்.இறுதியாக மாவட்ட பொது செயலாளர் ரியாஸ் நன்றி உரையாற்றினார்.




Labels:

நிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்

நெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். 
*************************************************
ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர் இரண்டாமாண்டு பயின்று வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துள்ளார். இது நிறுவனப் படுகொலை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீதி விசாரணை கோரியும் ,இந்த உயிரிழப்பிற்கு காரணமான கொடியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் தேசம் முழுவதும் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக தென்காசி BSNL அலுவலகம் முன்பு (20.01.16) மாலை 4.00 மணியளவில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இதற்கு கேம்ப்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் , சிறப்பு அழைப்பாளராக தோழர் ரவூப் அவர்கள் உரையாற்றினார், மாவட்ட செயலாளர் அசார் நன்றியுரை ஆற்றினார்.




Labels:

சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டம்..


ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர் இரண்டாமாண்டு பயின்று வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துள்ளார். இது நிறுவனப் படுகொலை இதனை கண்டித்து மாணவ இயக்கங்களின் சென்னை சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டம்..







Labels:

தலித் மாணவன் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு எதிராக போராட்டம்

கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அமைப்பின் மாணவர்கள் 50 பேர்கைது !
*************************************************
நீதி கேட்ட மாணவர்கள் கைது !!
ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர் இரண்டாமாண்டு பயின்று வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துள்ளார். இது நிறுவனப் படுகொலை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் நீதி விசாரணை கோரியும் ,இந்த உயிரிழப்பிற்கு காரணமான கொடியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் தேசம் முழுவதும் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு (19.01.15) மாலை 4.30 மணியளவில் ஜனநாயக ரீதியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் முன்னணி ,பெரியார் திராவிட மாணவர் அணி,அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ,சமத்துவ மாணவரணி,மீதேன் திட்டத்திற்கு எதிரான மாணவ அமைப்பு ஆகிய அமைப்புகளை சார்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.