Labels:

T.N.P.S.C இணையதளம் மூலம் பெயரைப் பதிவு செய்யும் வசதி அறிமுகம்:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வோர் தங்களுடைய பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இணையதளத்தில் பதிவு செய்தவுடன் உங்களுக்கென பிரத்யேக பயனர் பெயர் (யூஸர் நேம்) மற்றும் கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) வழங்கப்படும். இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பிரத்யேக வசதி மூலம் அறிவிக்கப்படும் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். ஐந்தாண்டுகளுக்கு இந்த பிரத்யேக பயனர் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வசதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ், திங்கள்கிழமை தொடங்கிவைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது:

பெயரைப் பதிவு செய்யும் போது உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். தேர்வுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் அதுகுறித்த தகவல் மின்னஞ்சலிலும், செல்போனிலும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இந்தியன் வங்கிக் கிளைகள்:

தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஒரு முறை பெயரைப் பதிவு செய்து பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்ற பிறகே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். பெயரைப் பதிவு செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை தமிழகம் முழுவதும் உள்ள இந்தியன் வங்கியின் 800 கிளைகளில் செலுத்தலாம். அஞ்சல் நிலையங்களிலும், கடன் அட்டைகள் மூலமும் கட்டணத்தைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையதள வசதியை கிராமத்தில் உள்ளவர்களும் பெறும் வகையில், இணையதள இணைப்பு, பிரிண்டர் போன்ற வசதிகளுடன் 500-க்கும் மேற்பட்ட உதவி மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத மத்தியில் அவை அமைக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு 285 தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இப்போது விண்ணப்பிக்கும் முறை இணையதளம் மூலம் கொண்டு வரப்பட்டதால் அந்தத் தபால் நிலைய வளாகங்களில் அல்லது அதற்கு அருகில் உதவி மையங்கள் அமைக்கப்படும்.

மேலும், 200-க்கும் மேற்பட்ட இந்தியன் வங்கிக் கிளைகளின் வளாகங்களிலும் உதவி மையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஒவ்வொரு தாலுகாவுக்கும் இரண்டு வீதம் தமிழகம் முழுவதும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்றார் நட்ராஜ். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தேர்வாணையத்தின் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஒரு முறை பதிவு கட்டாயம்: தேர்வுக்கான அறிவிக்கைகள் எப்போது வெளியிடப்பட்டாலும் உங்களுடைய பெயரை ஒருமுறை பதிவு செய்து பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பெறுவது கட்டாயம். தேர்வாணையத்தின் இணையதளத்தில் இதற்கான வசதி உடனடியாக நடைமுறைப்பட்டுள்ளது. குரூப் 4, வி.ஏ.ஓ. போன்ற தேர்வுகளின் போது அவசரம் அவசரமாக விண்ணப்பித்து பெயர்களைப் பதிவு செய்வதை விட, இப்போதே பெயர்களை பதிவு செய்து கொள்வது நல்லது என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். 
Just click the link & Register..

1 comments :

  1. bai last date apa visit:www.almanjakollai.blogspot.com

Post a Comment